செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரும் அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு ஓந்தாச்சிமடம் பாலத்தில் நேற்று மாலை தீப்பந்தம் ஏந்திய போராட்டம் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன் மற்றும் இ.சிறிநாத், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியாக நடந்து சென்று பின்னர் பாலத்தின் நடுப்பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு வருகின்ற போது இடையில் இடம்பெற்ற இவ்வாறான மனிதப் புதைகுழிகள், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதியினை பெற்றுத் தர வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.




















