ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணம் – கல்கிசை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை தினமும் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணம் – கல்கிசை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை கடந்த சில வாரங்களாக வார இறுதி நாட்களிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அண்மைக்காலமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் நிமித்தமும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகவும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இந்தச் சேவையைத் தினமும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும்.” – என்றார்.