ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (23) பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நாட்டிலுள்ள பல்வேறு மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்தில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், மனித உரிமைகள்சார் பல்வேறு விடயங்கள் தொடர்பில் மேலும் பல அரசு உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலகையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் அறிவித்துள்ளது.