யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட பெண் குழந்தை ஒன்று இன்றைய தினம் (23) உயிரிழந்துள்ளது. சாவகச்சேரி, மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த கேதீசன் கிஷாரா என்ற 8 மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு ஏற்கனவே ஆஸ்துமா நோய் உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் (22) பெற்றோர் குழந்தையை அழைத்துக் கொண்டு இன்றைய தினம் பூநகரிக்கு சென்றவேளை மூச்சு எடுப்பதற்கு குழந்தை சிரமப்பட்டது.
இந்நிலையில் பெற்றோர் குழந்தையை பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வைத்தியர்கள் குழந்தையை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றினர். பின்னர் குழந்தை அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.