திருகோணமலை நகர சபையானது மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டு முதலாவது சபை அமர்வானது இன்று (23) மாலை 2.00 மணிக்கு இடம்பெற்றது.
இவ் அமர்வுக்கு கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமை தாங்கினார்.
மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கு எந்த ஒரு கட்சியும் அதற்குறிய 50 வீதம் கோரத்தை கொண்டிருக்காத நிலையில் முதல்வர் தெரிவு இடம்பெற்றது.
தெரிவு இடம்பெற்ற போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருகோணமலை மாநகர சபை சிவபுரி வட்டாரத்தின் சார்பில் தெரிவு செய்யபட்ட கந்தசாமி செல்வராஜா, தேசிய மக்கள் சக்தி சார்பாக அபயபுர வட்டாரத்தின் உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத் ஆகிய இருவரின் பெயர்கள் பிரேரிக்கபட்ட சந்தர்ப்பத்தில் சபையில் இருந்த 25 உறுப்பினர்களும் திறந்த வாக்கெடுப்புக்குக் கோரியதனால் திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.
வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் பிரேரிக்கப்ட்ட கந்தசாமி செல்வராஜா 19 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பதுகே தனுஸ்க ஜெயலத் 06 வாக்குகளையும் பெற்றார்.
அதனடிப்படையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் கந்தசாமி செல்வராஜா திருகோணமலை மாநகர சபையின் கௌரவ முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை உப முதல்வராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் முகமட் மெளசூம் சபையில் ஏகமானதாக தெரிவு செய்யப்படார் என்பது குறிப்பிடத்தக்கது.


