வரலாற்று சிறப்பு மிக்க வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய பிரதான வீதிக்கு காப்பற் இடப்பட்டு இன்றையதினம் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரனால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழாவான இன்றையதினம் நாடு முழுவதும் இருந்து பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தருகின்ற நிலையில் அவர்களின் போக்குவரத்தினை சிரமமின்றி மேற்கொள்ளுவதற்காக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் 24 மில்லியன் ரூபா செலவில் 1.75 கிலோ மீற்றர் காப்பற் வீதிக்கு இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டிருத்தனர்.
