ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா நகரில் முச்சகரவண்டி ஒன்று இன்று (23)விபத்துக்குள்ளாகியுள்ளது.
நானுஓயாவில் இருந்து நானுஓயா பாடசாலைக்கு இரு மாணவர்களை அழைத்து சென்ற போது முன்னாள் சென்ற பாரவூர்தியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த முச்சகரவண்டி விபத்துக்குள்ளானது விபத்தின் போது வண்டியில் சாரதி உட்பட இருவர் பயணித்தனர். அவர்களுக்கு எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.