இந்தியா – பெங்களூரை சேர்ந்த திரைப்பட இயக்குநர் கு.கணேசனது ஊடக சந்திப்பு நேற்று யாழ் – வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது. அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
திரைப்படங்களில் சமூகநீதிக்கு மாறான காட்சிகளை அமைத்து இளைஞர்களை சமூக சீர்கேடுகளை நோக்கி நகர்த்துகிறது. பெரும் நடிகர்கள் ரசிகர்களை இலட்சக் கணக்கில் தமக்குப் பின் வைத்து விசிலடிச்சான் குஞ்சுகளை உருவாக்கிவிட்டுள்ளது.
இசைப்பிரியாவின் ஊடக பயணத்தை திரைப்படமாக்கினேன் ஆனால் அதனை வெளிவரவிடாது பலர் தடைகளை ஏற்படுத்தினர் ஆனாலும் அதனையும் தாண்டி ஏழாண்டுகளுக்குப் பின்னர் இசைப்பிரியாவின் வரலாறு வெளிவந்துள்ளது.
ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைக்கு ஈழத்தமிழர்களே தான் காரணம், எல்லாவற்றுக்கும் குறைகளைக் கூறிக் கொண்டு அழிவின் நிலைக்கு வந்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.