1865
இலங்கையில் இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அரச ஆணைக்குழு அமைக்கப்பட்டது.
1868
தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை கிறித்தோபர் சோலசு பெற்றார்.
1894
பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பாரிசில் அமைக்கப்பட்டது.
1940
கிட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிஸ் சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிஸ் சென்றார்.
1940
என்றி லார்சன் வடமேற்குப் பெருவழியால் மேற்கில் இருந்து கிழக்கு வரையான பயணத்தை வான்கூவரில் இருந்து ஆரம்பித்தார்.
1941
இலித்துவேனிய செயற்பாட்டு முன்னணி சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்து, இடைக்கால அரசை அமைத்தது.
1942
இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் போர் வானூர்தி வேல்சில் தவறுதலாகத் தரையிறங்கிய போது கைப்பற்றப்பட்டது.
1942
இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
1946
கனடாவின் வான்கூவர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1960
பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
1961
பனிப்போர்: அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
1967
பனிப்போர்: அமெரிக்க ஜனாதிபதி லின்டன் பி. ஜான்சன் சோவியத் பிரதமர் அலெக்சி கொசிஜினை நியூ செர்சியில் சந்தித்தார்.
1980
இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.
1985
அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
2001
பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.
2010
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் ஆரம்பமானது.
2016
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் 52 சதவீதத்தினர் வாக்களித்தனர்.
2017
பாகிஸ்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 96 பேர் கொல்லப்பட்டனர்





