பஞ்ச தள இராஜகோபுரத்துடன் அமையப்பெற்ற மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு அருள்மிகு ஸ்ரீ அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண பஞ்சகுண்டபட்ஷ மஹா கும்பாபிஷேகமானது நிகழும் மங்களகரமான விசுவாவசு வருஷம் ஆணி 18ம் நாள் (02.07.2005) ஆம் திகதி புதன்கிழமை ஸப்தமி திதியும் உத்தர நட்சத்திரமும் அமிர்த சித்த யோகமும் கூடிய அதிகாலை 5.54 மணிமுதல் 6.54 மணிவரை உள்ள மிதுன லக்ன சுபமுகூர்த்த வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற அம்பாரைவில் பிள்ளையார் திருவருள் பாலித்துள்ளார்.
ஆலயத்தின் கர்மாரம்பம்(26-06-2025)ஆம் திகதி இடம் பெறும்.
எண்ணெய்க்காப்பு சாத்துதல் (28-06-2025),(29-06-2025),(30-06-2025)ஆம் திகதி வரைக்கும் மூன்று தினங்கள் இடம் பெறும்.
எண்ணெய் காப்பு சாத்துதல் என்பது கோயில்களில் உள்ள சிலைகள் அல்லது உற்சவ விக்கிரகங்களுக்கு எண்ணெய் பூசி, அதை உலர வைக்கும் ஒரு சடங்காகும். இது கோயில்களில் நடைபெறும் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். இதன் மூலம் கடவுளின் சிலை அல்லது உற்சவ விக்கிரகம் புனிதப்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்படும் என்பது நம்பிக்கை.
மஹா கும்பாபிஷேகமானது (02-07-2025)ஆம் திகதி இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
“அனைவரும் வருக, வருக. அம்பாரைவில் பிள்ளையாரின் திருவருள் பெறுக.”

