பிரேசிலின் சாண்டா கேடரினா மாநிலத்தில் பிரியா கிராண்டே நகரில் சனிக்கிழமை (21) வெப்பக்காற்று பலூன் ஒன்று தீப்பிடித்து எரிந்து தரையில் விழுந்ததில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தின் போது அந்த வெப்பக்காற்று பலூனில் பயணம் செய்த 21 பேரில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சாண்டா கேடரினா மாநில தீயணைப்புத் துறையின் தகவல்படி,
சுற்றுலாவிற்குப் பயன்படுத்தப்பட்ட பலூன், காலை விமானப் பயணத்தின் போது திடீரென தீப்பிடித்தது. தீ விபத்துக்குப் பின்னர், பலூன் பிரியா கிராண்டே நகரில் தரையில் விழுந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த 13 பேர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.