மத்திய கிழக்கில் பதட்டங்கள் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், ஈரானில் தற்போது வசிக்கும் இலங்கை பிரஜைகள் குறித்த விவரங்களை வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு அமைச்சின் தகவலின் படி, தற்போது 37 இலங்கையர்கள் ஈரானில் உள்ளனர்.
அண்மைய நாட்களில் நான்கு இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கையர்களுக்கு இந்தியப் பிரஜைகளுடன் சேர்த்து வெளியேறும் விமானங்களில் இடமளிக்க இந்திய அரசாங்கத்துடன் இலங்கை ஏற்பாடு செய்துள்ளதாக முன்னைய அறிக்கைகள் தெரிவித்தன.
ஈரானில் உள்ள இலங்கை பிரஜைகள் வெளியேற விரும்பினால் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.