யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்றையதினம் கைதுசெய்யப்பட்டனர்.
அரியாலை நாயான்மார்கட்டை சேர்ந்த 25, 28, 30 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கையின்போது மூன்று கூரிய வாள்களும் உந்துருளியும் கைப்பற்றப்பட்டது.
உதயபுரம் பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு சகோதரர்கள் மீது இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளின்போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

