“நாம் மீண்டும் மக்கள் ஆதரவு அலையுடன் எழுச்சி பெறுவோம். மீண்டும் மொட்டுக் கட்சியின் ஆட்சி மலரும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தோல்வியடைந்துவிட்டது என்றோ – அது மீண்டும் எழுச்சி பெறாது என்றோ அநுர அரசு தப்புக்கணக்குப் போடக்கூடாது. நாம் மீண்டும் மக்கள் ஆதரவு அலையுடன் எழுச்சி பெறுவோம். மீண்டும் மொட்டுக் கட்சியின் ஆட்சி மலரும்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்துவோம். இந்தப் போலி அரசு போல் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தமாட்டோம். பழிவாங்கல் நடவடிக்கையில் நாம் ஈடுபடவும் மாட்டோம்.
ராஜபக்ஷ அரசில் இருந்த அமைச்சர்களை ஒவ்வொருவராகச் சிறையில் அடைப்பதில் அநுர அரசு குறியாகவுள்ளது. ஏன் இந்தப் பழிவாங்கல்?
போலி வேடம் போட்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசை மக்கள் விரைவில் விரட்டியடிப்பார்கள். மக்கள் ஆணை மீண்டும் எமக்குக் கிடைக்கும்.” – என்றார்.