அம்பாறையில் ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அம்பாறை பிரிவில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணல் போக்குவரத்து தொழிலை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடரவும், அந்தத் தொழிலுடன் சட்டப்பூர்வமாகச் செயற்படுவதைத் தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் அந்த நபரிடமிருந்து 25,000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளனர்.
இந்நிலையில், இலஞ்சம் வழங்கியதாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.