வலய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் பங்கு பற்றிய செம்மண்ணோடை அல் – ஹம்றா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த போட்டியில் 18 வயது பிரிவில் எஸ்.எப். சப்ரா சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 9 முதலாம் இடங்களையும், 10 நிகழ்ச்சிகளில் இரண்டாம் இடங்களையும், 11 மூண்றாம் இடங்களையும் பெற்று 19 நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குழு நிகழ்ச்சியில் 17 வயதுக்குட்பட்ட எறிபந்து மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் 101 புள்ளிகளைப் பெற்று வலயத்தில் நான்காம் இடத்தினையும் கோட்ட ரீதியாக முதலாம் இடத்தினையும் பெற்று அல் – ஹம்றா வித்தியாலயத்தின் இது வரலாறு மிக்க பதிவாகும். இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் எம்.எல்.அன்சார், பிரதி அதிபர் எம்.ஏ.அஸீஸ், பயிற்றுவிப்பாளர்களான ஏ.எல்.எம்.சப்றாஸ், எஸ்.எம்.றிஸ்விகான், உடற்கல்வி ஆசிறியர் எம்.எம்.எம்.சர்ஜுன் மற்றும் ஆசிறியைகளான கயறுன்னிஷா, அகீலா, நிறோஷா, சப்ரின் பானு, முனீரா, சுமையா ஆகியோருக்கு பாடசாலை சார்பாக நண்றிகள் தெரிவித்துக் கொள்ளப்பட்டது.

