முல்லைத்தீவு மாவட்ட செயலகமும், இந்து சமய கலாச்சார அலுவல்கள் தினைக்களமும் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் இந்து சமய கலாச்சார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்தும் சர்வதேச யோகா தினமும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும். 21.06.2025 காலை 7.00 மணிக்கு புதுகுடியிருப்பு மத்திய கல்லூரி பிரார்த்தனை அரங்கில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் தலைமையில் இடம் பெற்றுள்ளது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார அலுவல்கள் தினைக்களத்தின் இந்து சமய கலாசார கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடாத்திய யோகாப் போட்டி வெற்றியீட்டிய மாணவர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றுள்ளது.
விசேட யோகா ஆற்றுகை, யோகா கற்கை நெறியினை ஆரம்பித்தல் போன்ற நிகழ்வும் நடைபெற்றுள்ளது.




