ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்ததாக வெளிவந்துள்ள திரைப்படம்தான் குபேரா.
இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி திரையரங்கில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் முதல் முறையாக தனுஷுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் நாகர்ஜுனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராவார். சிக்கந்தர் படத்திற்காக ரூ. 15 கோடி இவர் சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது.
ஆனால், அதை காட்டிலும் குபேரா படத்திற்கு குறைவான சம்பளம்தான் வாங்கியுள்ளார். ஆம், குபேரா படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.