• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஜய்ஸ்வால், கில் அபார சதங்கள்

Sangeetha by Sangeetha
June 21, 2025
in விளையாட்டுச் செய்திகள்
0
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: ஜய்ஸ்வால், கில் அபார சதங்கள்
Share on FacebookShare on Twitter

வெள்ளிக்கிழமை (20) இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ், ஹெடிங்லே விளையாட்டரங்கில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யஷஸ்வி ஜய்ஸ்வால், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் குவித்த அபார சதங்களின் உதவியுடன் இந்தியா பலமான நிலையில் உள்ளது.

இங்கிலாந்தினால் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 351 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இந்திய துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் சாய் சுதர்சன் (0) மாத்திரமே பிரகாசிக்கத் தவறினார்.

யஸஸ்வி ஜய்ஸ்வால், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 91 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ராகுல் 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து சாய் சுதர்சன் 4 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் ஜய்ஸ்வால், ஷுப்மான் கில் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் 159 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 101 ஓட்டங்களைப் பெற்றார். தனது 20ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் யஸஷ்வி ஜய்ஸ்வால் குவித்த ஐந்தாவது சதம் இதுவாகும்.

அதனைத் தொடர்ந்து ஷுப்மான் கில், உதவி அணித் தலைவர் ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் மிக இலகுவாக ஓட்டங்களைக் குவித்து பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 138 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலையில் இட்டனர்.

ஷுப்மான் கில் 175 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 127 ஓட்டங்களுடனும் ரிஷாப் பான்ட் 96 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 65 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

அணித் தலைவராக விளையாடிய முதல் டெஸ்டிலேயே ஷுப்மான் கில் சதம் குவித்தது விசேட அம்சமாகும். 33ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கில் 6ஆவது சதத்தைக் குவித்ததுடன் 2000 டெஸ்ட் ஓட்டங்களையும் பூர்த்திசெய்தார்.

பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

இது இவ்வாறிருக்க, போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் அஹமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் பலியானவர்களுக்கு இரண்டு அணியினரும் மௌன அஞ்சலி செலுத்தியதுடன் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.

Related Posts

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

by Bharathy
May 16, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக...

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

by Bharathy
May 13, 2026
0

அகமதாபாத்தில் செவ்வாயன்று 12 ஆம் திகதி நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

by Bharathy
May 13, 2026
0

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நீண்ட காலமாக தொழில்முறை கிரிக்கெட்டின் மறுக்க முடியாத வல்லமைமிக்க சக்தியாகத் திகழ்ந்து வருகிறது. தனது நட்சத்திர வீரர்கள் அணிவகுப்பு, பிரம்மாண்டமான பொழுதுபோக்கு...

மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!

மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!

by Bharathy
May 12, 2026
0

தரம்சாலாவில் நேற்றிரவு 11 ஆம் திகதி நடந்த விறுவிறுப்பான 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை...

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

by Bharathy
May 12, 2026
0

இந்திய மல்யுத்த வீராங்கனை​யான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த...

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: சோட்ரானி தோல்வி!

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: சோட்ரானி தோல்வி!

by Bharathy
May 12, 2026
0

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்​தில் உள்ள கிசா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 45-வது இடத்​தில்...

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!

by Bharathy
May 11, 2026
0

வங்கதேசம் - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்​பூர் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேச அணி 413 ரன்​கள்...

36வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: யாழ். மாவட்ட மட்டப் போட்டிகளில் கரவெட்டி மற்றும் கோப்பாய் அணிகள் வெற்றி!

36வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: யாழ். மாவட்ட மட்டப் போட்டிகளில் கரவெட்டி மற்றும் கோப்பாய் அணிகள் வெற்றி!

by Bharathy
May 9, 2026
0

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டிகள் அண்மையில் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மிகவும்...

மலையகத்தில் முதல் முறையாக கடினப்பந்து கிரிக்கெட் போட்டி!

மலையகத்தில் முதல் முறையாக கடினப்பந்து கிரிக்கெட் போட்டி!

by Bharathy
May 9, 2026
0

மலையகத்தில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியானது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரி என்பவற்றுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இப்...

உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு!

உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு!

by Bharathy
May 9, 2026
0

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 19, ஆம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி