இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் எல்லாம் காலை முதல் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. யோகா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும் பங்கேற்று யோகா செய்தனர்.
இந்த யோகா நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு, ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்து இருந்தது. ஆந்திராவில் இன்று 3 லட்சம் பேர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து பொதுமக்களுடன் இணைந்து அவர் யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்றார்.