கதிர்காம பாதயாத்திரையில் காட்டுப் பாதையில் முதல் நாளில் 10444பேர் யாத்திரை களத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
2025 ஆண்டு மொனராகல மாவட்ட கதிர்காமக் கந்தனின் தீர்த்த உற்சவ திருவிழாவில் கலந்து கொள்ள அதிகளவான பத்தர்கள் பாதயாத்திரையில் செல்கின்றனர்.
இதில் குமண தேசிய பூங்காவின் 2016 ஆண்டு பின்னர் இவ் ஆண்டுதான் அதிகளவான பாதயாத்திரையர்கள் குமண காட்டுப் பாதை வழியாக செல்வது குறிப்பிடத்தக்கது
இத்தொகையின் விபரம் பின்வருமாறு :-
ஆண்கள் (18 வயதுக்கு மேல்) – 4803 பேர்
ஆண்கள் (18 வயதுக்கு கீழ்) – 850 பேர்
பெண்கள் (18 வயதுக்கு மேல்) – 4202 பேர்
பெண்கள் (18 வயதுக்கு கீழ்) – 589 பேர்
மொத்தம் – 10444 பேர்
