உடையார்கட்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த உரிமையாளரிற்கு சுமார் நாற்பது ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் (20.06.2025) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட உடையார்கட்டு பகுதி, புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள பிரபல விற்பனை நிலையங்கள் மீது திடீர் சோதனை ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது திகதி காலாவதியான ,73g – 32 Maggie நூடில்ஸ் பைக்கற்றுகள், கச்சான் பிஸ்கட் போத்தல், 2 மிக்சர் போத்தல், 2 brinta chilli powder 5, samosa 3, lipton Ceylon packet 11, கருவாடு 4 kg, மிளகு 1 kg கைப்பற்றப்பட்டது.
அத்தோடு Medical இல்லாமை, food premices cap aphron இல்லாமை, முகச்சவரம் செய்யாமை, தண்ணி பகுப்பாய்வு சான்றிதல் இன்மை, கழிவு தொட்டி இன்மை, அனுமதி பெறப்படாது இயங்கிய விற்பனை நிலையம் என உரிமையாளர்களிற்கு எதிராக இன்று வெள்ளிகிழமை மேலதிக நீதவான் நீதிமன்றில் உடையார்கட்டு பொது சுகாதார பரிசோதகர் பிரதாஸினால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் குறித்த வழக்குகள் இன்றையதினமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது உரிமையாளர்களை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் 40000 ரூபா தண்டம் விதித்ததுடன் கடுமையான எச்சரிக்கையும் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த சோதனை நடவடிக்கையில் உடையார்கட்டு பொதுச் சுகாதார பரிசோதகர் பிரதாஸ், வள்ளிபுனம் பொதுச் சுகாதார பரிசோதகர் றொய்ஸ்ரன் ஜோய் ஆகியோர் இணைந்து மேற்காெண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




