சட்டவிரோதமாக மான் இறைச்சி வைத்திருந்த இருவரை நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள நல்லதண்ணி தோட்டத்தை சேர்ந்த ராமையா சந்திரபாபு, ஜெகநாதன் பெரியசாமி ஆகியவர்கள் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
நல்லதண்ணி வனத்துறை அதிகாரி ரத்நாயக்க மேலும் கூறுகையில்,
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தாங்கள் மான் இறைச்சி வைத்து இருந்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர் எனவும் அதற்கான வழக்கு எதிர்வரும் 18.07.2025 மீண்டும் எடுத்து கொள்ளப்பட உள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார்.