ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரானை கடந்த வாரம் இஸ்ரேல் தாக்கிய நிலையில் ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் என்ற பெயரில் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரான் தங்கள் எல்லையில் கொத்து குண்டுகளை ஏவுவதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. பொதுமக்களுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தடை செய்யப்பட்ட குண்டுகளை ஈரான் பயன்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, ஈரான் ஏவிய ஏவுகணையின் போர்முனை சுமார் 7 கிலோமீட்டர் (4 மைல்) உயரத்தில் உடைந்து, மத்திய இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 8 கிலோமீட்டர் (5 மைல்) சுற்றளவில் சுமார் 20 சிறிய குண்டுகளாக வெடித்து சிதறடித்தது.