அகமதாபாத்தில் கடந்த 12-ம் திகதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில், விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், விபத்து பகுதியில் இருந்த 29 பேரும் பலியானார்கள்.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா விமானங்கள் ரத்துசெய்யப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் 17-ம் திகதி ஏர் இந்தியாவின் 6 சர்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன. கடந்த 6 நாட்களில் மட்டும் 83 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஏர் இந்தியா சர்வதேச சேவைகளை 15 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது.
விமானச் செயல்பாடுகளின் நம்பகத்தன்மையை மற்றும் சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை ஆனி 20 முதல் குறைந்தபட்சம் ஆவணி 15-ம் திகதி வரை தொடரும். சேவை குறைப்பால் பாதிக்கப்படும் பயணிகளிடம் ஏர் இந்தியா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.
பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா மேற்கொள்ளும். திருத்தப்பட்ட புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.