வடக்கு, கிழக்கில் தமிழர் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் தலைமைக்கான தேர்வு இதுவரை 25 சபைகளில் இடம்பெற்றுள்ளது. அவற்றில் அதிகபட்சமாக இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணம் மாநகர சபை, மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 17 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
பருத்தித்துறை, கரவெட்டி, வலிகாமம் வடக்கு, புதுக்குடியிருப்பு, கரைச்சி, பூநகரி ஆகியவற்றுடன் வெருகல், ஆரையம்பதி, வவுணதீவு, போரதீவு, களுவாஞ்சிக்குடி, வாழைச்சேனை, செங்கலடி, வலிகாமம் மேற்கு, வலிகாமம் தெற்கு ஆகிய பிரதேச சபைகள் உட்பட 17 சபைகளை இலங்கைத் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன வவுனியா மாநகர சபையுடன் சாவகச்சேரி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை ஆகிய 3 நகர சபைகளையும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை என 5 சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி நல்லூர் பிரதேச சபையையும், சுயேட்சைக் குழுக்கள் காரைநகர் உட்பட 3 சபைகளையும் கைப்பற்றியுள்ளன.