இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை கூட தீர்மானித்துள்ளது.
நேற்று புதன்கிழமை வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது குண்டுவீச்சு நடத்துவதில் இஸ்ரேலுடன் இணைவதா இல்லையா என்பது குறித்து இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை என்று கூறினார்.
ஈரானின் உச்ச தலைவர் அலி கமெனி புதன்கிழமை ஒரு தொலைக்காட்சி உரையில் ஈரான் சரணடையாது என்றும், எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் “சரிசெய்ய முடியாத சேதத்தை” அவர்களுக்கு ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.
தற்காலிக இணைய கட்டுப்பாடுகளை விதிக்க ஈரான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சு புதன்கிழமை ஈரானிய தேசிய ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இரு தரப்பின் பரஸ்பர தாக்குதல்கள் தொடர்கின்றன, சரியான சேத விவரங்கள் எதுவும் தெளிவாக வெளியிடப்படவில்லை.




