இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. ஈரானில் 4,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். இதில் பாதி பேர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள். இவர்கள் ஈரானில் உள்ள உர்மியா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர்.
இவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும் என இவர்களின் பெற்றோர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து ஈரானில் உள்ள இந்தியர்களை அர்மீனியா எல்லை வழியாக அழைத்து வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது.
அவ்வாறு தோகா வந்தடைந்த இந்திய மாணவர்கள் 110 பேர் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 90 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.