இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி – 20 உலகக் கிண்ணத்தின் ஆரம்பப் போட்டியில் இலங்கையும் வரவேற்பு நாடான இங்கிலாந்தும் விளையாடவுள்ளன.
இப் போட்டி பேர்மிங்ஹாம் எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் 2026 ஆனி 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தின் 10ஆவது அத்தியாயம் இங்கிலாந்தில் 2026ஆம் ஆண்டு ஆனி 12ஆம் திகதி ஆரம்பமாகி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் ஆவணி 5ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியுடன் நிறைவுபெறும்.
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் 3 அத்தியாயங்களில் (2009, 2010, 2012) 8 அணிகளும் அடுத்த 6 அத்தியாயங்களில் (2014, 2016, 2018, 2020, 2023, 2024) 10 அணிகளும் பங்குபற்றின.
பத்தாவது அத்தியாயத்தில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், நியஸிலாந்து ஆகியவற்றுடன் குழு 2இல் இலங்கை இடம்பெறுகிறது. அத்துடன் பிராந்தியங்களில் நடைபெறும் மகளிர் ரி10 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றிலிருந்து இரண்டு அணிகள் இக் குழுவில் இணையும்.
குழு 1இல் அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், 2 தகுதிகாண் அணிகள் ஆகியன இடம்பெறும்.
10 அணிகள் பங்குபற்றும் மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 30 லீக் போட்டிகளும் 3 இறுதிச் சுற்று போட்டிகளும் நடத்தப்படும்.
லீக் போட்டிகள் யாவும் ஆனி 29ஆம் திகதியுடன் நிறைவடையும்.
அரை இறுதிப் போட்டிகள் தி ஓவல் விளையாடரங்கிலும் இறுதிப் போட்டி லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறும்.
முதலாவது அரை இறுதிப் போட்டி ஆனி 30ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஆவணி 2ஆம் திகதியும் இறுதிப் போட்டி ஆவணி 5ஆம் திகதியும் நடைபெறும்.
லீக் போட்டிகள் எஜ்பெஸ்டன், ஹெடிங்லே, ஓல்ட் ட்ரஃபோர்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு, பிறிஸ்டல் கவுன்ட் மைதானம், ஹெம்ப்ஷயர் பௌல் ஆகிய மைதானங்களில் நடைபெறும்.
இலங்கையின் போட்டிகள் (குழு 2)
ஆனி 12 எதிர் இங்கிலாந்து (எஜ்பெஸ்டன்)
ஆனி 16 எதிர் நியூஸிலாந்து (ஹெம்ப்ஷயர் பௌல்)
ஆனி 20 எதிர் மேற்கிந்தியத் தீவுகள் (பிறிஸ்டல் கவுன்டி)
ஆனி 23 எதிர் தகுதிகாண் அணி (பிறிஸ்டல் கவுன்டி)
ஆனி 25 எதிர் தகுதிகாண் அணி (ஓல்ட் ட்ரஃபோர்ட்)