இஸ்ரேலுடன் மோதல் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில் ஈரானிய மக்களது தொலைபேசிகளிலிருந்து வட்ஸ் அப் செயலியை நீக்குமாறு ஈரானிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரானில் இருந்து பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் இஸ்ரேலுக்கு பகிரப்படுவதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஈரான் அரசின் இந்த வலியுறுத்தலை மெட்டா நிறுவனம் ஏற்க மறுத்துள்ளதோடு இதுபோன்ற தவறான தகவல்கள் தங்களின் சேவைகளை பாதிக்கும், பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பது எங்களின் கடமை என்றும் கூறியுள்ளது.
மேலும், யார், யாருக்கு என்ன செய்திகள் அல்லது குறிப்புகள் அனுப்புகின்றனர், தனிப்பட்ட தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்க மாட்டோம் என்று உறுதியுளித்துள்ளது.
எந்த அரசாங்கத்துக்கும் இந்த தகவல்களை பகிர்வது இல்லை என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.