மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பதை காணமுடிந்தது.
ஈரான் – இஸ்ரேல் மோதல் நிலைமைகள் காரணமாக இலங்கையில் பெற்றோல் தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக மக்கள் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் முண்டியடிகின்றனர்.
இந்நிலையில் “மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை” என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் அதிகமாக காணப்படுவது தொடர்பாக குறித்த விடயம் உண்மையா என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் வினாவிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் “குறித்த எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்பது தொடர்பாக அரசாங்கமும் ஊடகம் வாயிலாக அறிவித்துள்ளது. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் எவ்விதமான தட்டுப்பாடும் இல்லை. மக்கள் வீணாகச் சென்று மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம்” என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

