மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் மற்றும் அதனால் ஏற்படும் நிலைமைக்கு அச்சமாக, வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
வவுனியாவின் நகரம் மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் உள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தனியார் நிரப்பு நிலையங்களில், எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் அதிகளவில் கூடி வருவதால், அந்தந்த நிலையங்களில் நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


