ஆரம்பப் பிரிவு மாணவர்களது திறன் மேம்பாட்டுக்காக திருகோணமலை பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தில் மாணவர் சந்தை ஒன்று சிறப்பாக இன்று இடம் பெற்றது.
ஆரம்பப் பிரிவு மாணவர்களது திறன் மேம்பாட்டுக்காக இன்று செவ்வாய்க்கிழமை (17) 200 ஆண்டுகளைத் தாண்டி திருகோணமலையில் கம்பீரமாக கல்வியை வழங்கும் திருகோணமலை பெருந்தெரு விக்நேஸ்வரா மகா வித்தியாலயத்தில் மாணவர் சந்தை வித்தியாலய அதிபர் திருமதி . சனில் குமார் தலைமையில் பகுதித் தலைவர் திருமதி மா. சிவகரன் ஆசிரியர் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந்த நிகழ்வுக்கு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் முன்னாள் மாணவரும், திருகோணமலை மாநகர சபை உறுப்பினருமாகிய உதயகுமார் அஜித்குமார் விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.



