கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ கோஸ்டா வழங்கியுள்ளதர்.
அந்த ஜெர்சியில், “அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு” என்று எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளியை ட்ரம்ப் இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளார்.
ஆனி 15ஆம் திகதி, ட்ரம்ப் கனடாவின் கால்கரியில் உள்ள G7 மாநாட்டுக்காக சென்றிருந்த போது இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.