ஈரானிய இராணுவத் தளபதி அலி ஷட்மானி இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் நேற்று(16.06.2025) இரவு நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், ஈரானிய ஊடகங்களில் ஷட்மானியின் மரணம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
உயரடுக்கு IRGC படைக்கும் வழக்கமான ஈரானிய இராணுவத்திற்கும் இடையிலான கூட்டு இராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிடும் தலைமையகத்தின் தலைவராக அலி ஷட்மானி கடமையாற்றி வந்தார்.
இதற்கு முன்னர் அதே பதவியை வகித்த கோலமாலி ரஷீத், கடந்த வாரம் நடந்த இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து அலி ஷட்மானி அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.