250 சர்வதேச புள்ளிகளை கொண்ட WTA மகளிர் டென்னிஸ் தொடர் வரும் ஐப்பசி சென்னையில் 2 கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என உலக டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இந்த வருடம் ஐப்பசி மாதம் 27 ஆம் திகதி WTA 250 மகளிர் டென்னிஸ் தொடர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு சென்னையில் WTA 250 டென்னிஸ் போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் WTA 250 டென்னிஸ் தொடர் போட்டிகள் மீண்டும் நடைபெற உள்ளன.