மாத்தறை, வெலிகம, மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த விலையுயர்ந்த புராதன முகமூடிகளை திருடியதாக கூறப்படும் தேரர் உட்பட மூவர் வெலிகம காவல்துறையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 வயதுடைய தேரரும், 62 மற்றும் 42 வயதுடைய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மிரிஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்த விலையுயர்ந்த புராதன முகமூடிகள் திருடப்பட்டுள்ளதாக குறித்த விகாரையின் விகாராதிபதி கடந்த 07 ஆம் திகதி வெலிகம காவல்துறையினருக்கு முறைப்பாடு அளித்துள்ளார்.
இது தொடர்பில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட தேரர் குறித்த விகாரையில் வசித்து வருவதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.