கொழும்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இதேசமயம், கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைப்பதற்கு ஆளும் தேசிய மக்கள் சக்தியும் எதிர்க்கட்சிகளும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின்படி கொழும்பு மாநகர சபையில் எந்தவொரு கட்சியும் அல்லது சுயேட்சைச் குழுவும் பெரும்பான்மை பெறவில்லை.
மொத்தம், 117 உறுப்பினர்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையில், தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 5 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களையும், சுயேட்சைக் குழு – 03 மூன்று ஆசனங்களையும், சர்வஜன அதிகாரம் 2 ஆசனங்களையும், ஐக்கிய சமாதானக் கூட்டணி 2 ஆசனங்களையும், சுயேட்சைச் குழு – 04, சுயேட்சைச் குழு 05 என்பன தலா இரண்டு ஆசனங்களையும் கொண்டுள்ளன.
கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க 59 உறுப்பினர்கள் தேவைப்படும். ஆனால், எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை.
இந்நிலையில், கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பது தொடர்பாக அதன் முதல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.