யாழ். செம்மணிப் புதைகுழி அகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் அலகு மாணவர்களையும் ஈடுபடுத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி மீண்டும் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அகழப்படும் போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தி்ன் தொல்லியல்துறை மாணவர்களையும் ஈடுபடுத்துவதற்குக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ். சட்ட வைத்திய அதிகாரியால் யாழ். பல்கலைக்கழகத்திடம் உத்தியோகபூர்வமாக இந்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 45 தினங்களுக்கு அகழ்வுப் பணிக்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதிவான் நீநிமன்றம் வழங்கியுள்ளது. அந்தக் காலத்தில் இடம்பெறும் அகழ்வுப் பணிக்கான செலவு விவரங்களும் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த அனுமதிகள் கிடைத்தவுடன் எதிர்வரும் 26ஆம் திகதி அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படும்போது இம்முறை யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் அதில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.