இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீதுள்ள பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) மாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பாலத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், சிலர் விழுந்து கரையை வந்தடைந்தடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஆற்றில் விழுந்த மற்றையவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்து பிரபல சுற்றுலாத் தலமான குண்ட்மாலாவில் மாலை 3:30 மணியளவில் நிகழ்ந்தது. வார இறுதி என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தனர்.
இந்த பழைய பாலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நின்றிருந்தபோது திடீரென இடிந்து விழுந்ததில் பலர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

