வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை வழிப்பறி, கொள்ளை, கொலைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களின் பிரகாரம் 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வடக்கில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 31ஆம் திகதி வரை தீவிரமான குற்றச் செயல்களுக்காக 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐந்து மாதங்களில் 80 கொள்கைகளும், 4 வழிப்பறிகளும், 238 திருட்டுக்களும் இடம்பெற்றுள்ளன.
இதன்படி கொள்ளைகளில் 87 சந்தேகநபர்களும், வழிப்பறியுடன் தொடர்புடைய 2 சந்தேகநபர்களும், திருட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 212 சந்தேகநபர்களும் என மொத்தமாக 301 கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.