ஈரான் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மற்றும் ஒரு அணுசக்தி திட்டத்தின் மீது இஸ்ரேல் விரிவான தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர் ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதாவது:
அமெரிக்காவை ஈரான் குறிவைத்து தாக்கினால் இதற்கு முன் கண்டிராத அளவுக்கு மோசமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும். ஈரான் மீதான தாக்குதலுக்கும், அமெரிக்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை; எந்த வகையிலும், வடிவிலும் ஈரான் தாக்கினால் அமெரிக்க ஆயுதப் படை முழு பலத்துடன் களமிறங்கும். இருப்பினும், ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்‘ இவ்வாறு தெரிவித்துள்ளார்.