இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கவுரிகுண்ட் அருகே இன்று, அதிகாலை 5:20 மணியளவில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த உலங்கு வானூர்தி கவுரிகுண்ட் அருகே காட்டுப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்த உலங்கு வானூர்தியில், ஒரு விமானி உள்ளிட்ட ஐந்து பெரியவர்கள் மற்றும் ஒரு சிறுவன் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் உத்தரகண்ட், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் வானிலை மிகவும் மோசமாக இருந்ததால், உலங்கு வானூர்தி வழி தவறிச் சென்றதாகக் தெரிவிக்கப்படுகிறது.