கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் வைரவிழா நிகழ்வுகள் இன்று காலை ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகின்றது.
பாடசாலையின் முதல்வர் சிவதர்சினி கிருசாந்தன் தலைமையில் நடைபெற்றுவரும் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ம.பற்றிக்நிரஞ்சன் கலந்து கொண்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் ஏனைய பாடசாலைகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், என பலர் கலந்து கொண்டுள்ளனர்.










