கொழும்பு – கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பன்சல வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இன்று (15) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் வீட்டின் வாயிலிலும் வீட்டை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிப் பிரயோத்தில் யாருக்கும் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விசாரணைகளின் அடிப்படையில், நிதி தகராறு காரணமாக துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் கொஹுவல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.