5 வயதுடைய சிறுவன் ஒருவன் நடந்து சாதனை படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (14) இல்டன்ஹால் நகரத்தில் இருந்து தலவாக்கலை பேருந்து நிலையம் வரை 5 வயது சிறுவன் நடந்து சாதனை படைத்துள்ளான். மவுசாஎல்ல கீழ்ப்பிரிவைச் சேர்ந்த பிரேமராஜா அருள்ரோஜி தம்பதியின் புதல்வன் கார்கியின் 1.30 மணித்தியாலத்தில் நிகழ்ந்த இச்சாதனை, ராபா உலக சாதனை புத்தகங்கள் மூலம் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி அவர்களின் செயலாளரும், சட்டதரணியான உதய புனிதன், அக்கரப்பத்தனை பிரதேச சபை உறுப்பினர் ராசையா கவிஷான் மற்றும் சர்வதேச சிலம்பம் சம்மேளனத்தின் உப தலைவரும் சிலம்பம் பயிற்றுவிப்பாளருமான திவாகரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறுவனை வாழ்த்தினர்.
இந்நிகழ்வை வெளிநாட்டில் பணியாற்றும் மலையக சொந்தங்களின் அன்னை அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. இலங்கைக்கான பணிப்பாளர் சிறுவனின் சாதனையை சாதனை புத்தகத்தில் பதிவு செய்து பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

