கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் இன்று (14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதவாச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கிளை நிறுவனங்களான மாகாண சுகாதாரத் திணைக்களம், சுதேச வைத்திய திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் சிறுவர் பராமரிப்பு நன்னடத்தை திணைக்களம் ஆகியன இணைந்து இந்த வைத்திய முகாமை ஏற்பாடு செய்திருந்ததாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் செயலாளர் எச்.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் என். தலங்கம, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொதுமக்களுக்கு தேவையான வைத்திய சேவைகளை வழங்குவதற்கு பல்வேறு துறைசார்ந்த வைத்திய நிபுணர்கள் இந்த வைத்திய முகாமில் பங்கேற்றனர்.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, பிரதம செயலாளர் டி.ஏ.சீ.என்.தலங்கம, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள செயலாளர் எச்.யீ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க, கிழக்கு மாகாண சுதேச வைத்திய திணைக்கள ஆணையாளர் எம்.ஏ.நபீல், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் பூர்ணிமா விமலரத்ன, சமூகத் திணைக்கள பணிப்பாளர் உதயகுமார் சிவராஜா, சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் றிஸ்வானி, திருகோணமலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் குமார் விக்ரமசிங்க, மற்றும் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் மற்றும் விசேட வைத்திய நிபுணர் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


