மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இல்லத்தின் தலைவரும், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பதில் பணிப்பாளரும் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான சரவணபவன் மோகனபவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண நன்னநடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ், கரைச்சி கோட்டக்கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரத்தினம், கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் த.ருபான்பிரசாந் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், இல்ல முகாமைத்துவ குழு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




