தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தி திருக்கோவில் கிளையின் முன்மொழிவுக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட 7 பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் வைபவம் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் இன்றைய தினம் வைபவ ரீதியாக (14.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட வேலைகள் மற்றும் அடிக்கல் நடும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன், பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. அனோஜா உஷாந், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாரை மாவட்ட முகாமைத்துவத் தொழிநுட்ப அதிகாரி பாஹிம், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் தோழர்.பா. சுதாகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் திருக்கோவில் பிரதேச தலைவர் தோழர் சதாசிவம் நிறோஜன், அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள், செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

