• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 9, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்

Sangeetha by Sangeetha
June 14, 2025
in இலங்கை செய்திகள்.
0
பொருளாதாரத்திலும் கல்வியிலும் முஸ்லிம் சமூகம் முன்னேற வேண்டும்..! – கலாநிதி எம்.எல் ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்
Share on FacebookShare on Twitter

கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும், பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், அமைப்பின் தலைவர் கமுதி பீ. சம்சுதீன் தலைமையில், ராயபுரம் பாரூக் மஹாலில் நேற்று (13) இடம்பெற்றது.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்;

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரான முனீரே மில்லத் பேராசிரியர் காதர் மொஹிதீன் அவர்கள் தொடர்பில் அறிந்திருகின்றேன். ஆனால் இன்று தான் அவரை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மை சமூகம் பல்வேறு சந்தர்ப்பங்களில் புறக்கணிப்பு செய்தது. குறிப்பாக அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கின்ற போது முஸ்லிம்கள் தொடர்பில் நேரடியாக பேசுவதற்கு சந்தர்ப்பங்கள் மறுக்கப்பட்டன. அதற்கான காரணம் முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான கட்சி இல்லாமல் இருந்ததே, இந்த நிலையில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.

எனது பிரதேசமான காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள நூதன சாலை தொடர்பில் இங்கு உரையாற்றிய பலரும் சிலாகித்துப் பேசினர். அதனை உருவாக்குவதற்கான பின்னணி வலுவானது. ஒரு சமூகத்தின் அடையாளம் என்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக எமது பிரதேசத்தின் அடிப்படை என்னவென்று தெரிந்து கொள்ள இந்த நூதன சாலை இன்று சான்றாக உள்ளது.

இன்றைய நவீன காலத்திற்கு ஏற்ப எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும், அதாவது எமது சமூகத்திற்கு எதிராக வருகின்ற கருத்துக்களை முறியடிக்க நாம் கற்றவர்களாக இருக்க வேண்டும். இன்றை துரதிஷ்டம் அதிகமானவர்கள் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர், அதுவும் இன்றியமையாததொன்று, அதைவிட முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது கல்விக்கு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் மட்டுல்ல இலங்கையிலும் ஏன் சவூதி அரேபியாவிலும் இன்று முன்னுரிமை பொருளாதரத்தை தேடுவது என்ற நிலையினை காணலாம். இலங்கையின் பண்டைய ஆட்சி காலத்தில் அமைச்சரைவையில் முஸ்லிம்கள் இருந்துள்ளனர். அவர்கள் தமது உரிமைக்காகவும், மதச் சுதந்திரத்திற்காகவும் போராடினார்கள், தங்களது கலாசாரத்தை இழந்த அடிமைப்பட்ட அரசியலுக்கு எதிராக பேசினார்கள், எமது மத உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

எனவே நாம் நெறிப்படுத்தப்பட்ட கலாச்சார விழுமியங்களுடன் எமது நேர்மையான செயற்பாடுகளை ஏனைய சமூகங்களும் பெருமைப்படும் வகையில் விதைப்பது காலத்தின் தேவையாகும் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினை பலப்படுத்துவதன் மூலம் முஸ்லிம்களுக்கான அரசியல் கட்டமைப்பினை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைத்தீன், பொதுச்செயலாளர் கே.ஏ.எம் அபூபக்கர் மற்றும், கமுதி பஷீர் பைத்துல்மால் அமைப்பின் நிர்வாகிகள், அரசியல் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் முகைத்தீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் கமுதி பஷீர் பைத்துல்மால் & எஜுகேஷனல் சொசைட்டி அமைப்பினால் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினையும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் இருவர் கைது.!

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது.!

by Mathavi
May 9, 2026
0

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு...

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

யாழ். போதனா வைத்தியசாலையின் எரிந்த பகுதி பொலிஸாரின் கட்டுப்பாட்டில்.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். போதனா வைத்தியசாலையின் தீக்கிரையான மருந்துக் களஞ்சியப் பகுதி, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் ஆய்வுகள் நிறைவடையும் வரை பொலிஸாரின் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்...

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு யாழில் மரநடுகை நிகழ்வு.!

by Mathavi
May 9, 2026
0

உலக செஞ்சிலுவை தினத்தை சிறப்பிக்கும் முகமாக, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளையினரால் இன்றைய தினம் விசேட மரநடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம்...

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

இது சதியா? தற்செயலா? – யாழ். வைத்தியசாலை தீ விபத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

by Mathavi
May 9, 2026
0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் பல ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கடற்றொழில், நீரியல் மற்றும்...

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணி தலைவராக ஊடகவியலாளர் லின்ரன் தெரிவு.!

by Mathavi
May 9, 2026
0

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ் கிளை இளைஞர் அணியின் புதிய நிர்வாகத் தெரிவு இன்று சனிக்கிழமை (09) காலை 10:30 மணியளவில் யாழ் கிளைத் தலைமைச் செயலகத்தில்...

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

வாக்குமூலம் கேட்டு கபில மீது சித்திரவதை.!

by Mathavi
May 9, 2026
0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு வாக்குமூலம் அளிக்குமாறு கபில சந்திரசேனவுக்குப் பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர்...

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. கடும் சந்தேகம்.!

by Mathavi
May 9, 2026
0

அரச திறைசேரி நிதி மோசடி மற்றும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்குகளுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியாளர்களின் மர்ம மரணங்கள் குறித்து அரசு உடனடி மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை...

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

இந்திர விழாவில் சுகாதார சீர்கேடு; 6 வியாபாரிகளுக்கு பிடியாணை.!

by Mathavi
May 9, 2026
0

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை இந்திர விழாவின் போது சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது செயற்பட்ட 6 உணவு நிலைய உரிமையாளர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் அறுவருக்கு ஒரு இலட்சத்து...

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

முல்லைத்தீவில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள்.!

by Mathavi
May 9, 2026
0

சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் ஏற்பாட்டில் அமைதிக்கான சர்வமத ஒருங்கிணைந்த பிரார்த்தனைகள் முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லை மாவட்டத்தின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஈரான், ரஷ்யா, அமெரிக்கா...

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

மகளையும், பேரப்பிள்ளையையும் காணவில்லை என தாய் பொலிஸில் முறைப்பாடு.!

by Mathavi
May 9, 2026
0

கணவருடன் சென்ற மகள் மற்றும் 10 மாதம் நிரம்பிய பேரப்பிள்ளை ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் தாய் அடம்பன் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி